தேவ் - NGK இணைந்தது!

தேவ் - NGK இணைந்தது!

தேவ் - NGK இணைந்தது!

தேவ் படத்துடன் இணைந்து NGK படத்தின் டீசர் பிப்ரவரி 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அன்று மாலை 6 மணிக்கு சமூக வலைத்தளங்களிலும் வெளியிடப்படுகிறது.

கார்த்தி மற்றும் ராகுல் ப்ரீத் சிங் இரண்டாவது முறையாக இணைந்து நடித்துள்ள தேவ் படத்தை அறிமுக இயக்குனர் ரஜத் ரவிசங்கர் இயக்கியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் முக்கிய வேடங்களில் பிரகாஷ் ராஜ் மற்றும் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளனர்.

சூர்யா மற்றும் செல்வராகவன் கூட்டணியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் NGK படத்தில் நாயகிகளாக சாய் பல்லவி மற்றும் ராகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Leave a Comment

OPEN IN APP